» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு சிலை : முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி

புதன் 16, ஏப்ரல் 2025 8:44:09 PM (IST)

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்திற்கு என ஒரு தனி அந்தஸ்தை பெற்று தர போராடிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்  பொன்னப்ப நாடாருக்கு நாகர்கோவிலில் சிலை அமைக்க முடிவு செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு  அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  நன்றியினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய போராளிகளில் பலர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என நமது மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. அதில் மிக முக்கியமான சுதந்திர போராட்ட வீரர்  பொன்னப்ப நாடார் . பெருந்தலைவர் காமராஜரின் வழி நடந்து காங்கிரஸ் கட்சியின் ஒரு முக்கிய தலைவராக விளங்கியவர் அவர்.

ஒரு தலைசிறந்த வழக்கறிஞர், கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு முன்னே திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்திற்கு இரண்டு முறையும், பின்னர் தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு முறையும் சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் மிக சிறப்பாக செயல்பட்டார்,

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு நடந்த போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர் திரு பொன்னப்ப நாடார் . அந்த போராட்டத்தில் ஈடுபட்டு வழக்குகளை சந்தித்த தியாகிகளுக்கு நீதிமன்றங்களில் துணை நின்றவர் அவர்.

குமரி மண்ணிற்கும் மக்களுக்கும் தனது பணிகள் வாயிலாக புகழ் சேர்த்த திரு, பொன்னப்ப நாடார் அவர்களுக்கு ஒரு சிலை அமைக்க   மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்திருப்பது குமரி மக்களை மகிழ்ச்சிக்குள் ஆக்கும் செய்தி. குமரி மக்கள் சார்பாக மனப்பூர்வமான நன்றி.

இத்தகைய தலைவர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள். இளம் தலைமுறையினர் இவர்களை குறித்து அறிந்து நினைவு கூர அவர்களுக்கென்ற அடையாளங்கள் தேவை. அதனை பூர்த்தி செய்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கன்னியாகுமரி மக்கள் சார்பாக எனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory