» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஈஸ்டர் பண்டிகை: விஜய்வசந்த் எம்.பி வாழ்த்து!

சனி 19, ஏப்ரல் 2025 12:30:49 PM (IST)

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் விஜய்வசந்த் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் திருநாளாம் ஈஸ்டர் பண்டிகையில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 

உலகின் பாவங்களை போக்க மனித குலத்திற்காக சிலுவையின் மேல் தனது உயிரை தியாகம் செய்த இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் நாளை நாம் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் கொண்டாடுவோம். 

நமது வாழ்வில் துன்பம் மற்றும் இருள் நிரந்தரமல்ல, தற்காலிகமானது தான் என்பதை எடுத்து கூறும் ஒரு நாள் ஈஸ்டர். மக்களுக்காக சிறந்த சேவைகள் மற்றும் நலப்பணிகளை பல இன்னல்களை நாம் சந்திக்க நேரிடும். நம்மை பலர் இகழ்துவார்கள், நம் மேல் கல்லெறிவார்கள். ஆனால் உண்மையான நமது உழைப்பிற்கும், தியாகத்திற்கும் தக்க பலனை காலம் நமக்கு பரிசளிக்கும் என்பது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நமக்கு கற்பித்து தரும் பாடம்.

தவக்காலத்தில் இன்பங்களை துறந்து, பிரார்த்தனையுடன் இருந்த மக்கள், மகிழ்ச்சியுடன் குதுகலிக்க இந்த நாள் உங்கள் அனைவருக்கும் காரணமாக அமையட்டும். கிறிஸ்துவின் தியாகத்தினை நினைவு கூர்ந்த உங்கள் அனைவருக்கும் அவரது ஆசீர்வாதம் என்றும் நிலைத்து நிற்கட்டும், நம்பிக்கையாலும் வெளிச்சத்தாலும் நிறைந்ததாக இருக்கட்டும்.. அனைவருக்கும்  எனது ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory