» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாணவியர் விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த அறிவுறுத்தல்!
செவ்வாய் 28, ஜனவரி 2025 4:12:12 PM (IST)
நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல விடுதியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் விடுதியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (28.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- நாகர்கோவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி சமையறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது. தொடர்ந்து மாணவிகளிடம் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற்றம் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது என தெரிவித்தார ஆய்வில் மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.