» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 31, ஜனவரி 2025 12:15:00 PM (IST)
கன்னியாகுமரி அண்ணல் காந்தி நினைவு மண்டப வளாகத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி கடற்கரையில் பகுதியில் அமைந்துள்ள தேசபிதா அண்ணல் காந்தியடிகளின் நினைவு மண்பட வளாகத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கடந்த 2000ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டஅய்யன் திருவள்ளுவர் சிலை 25வது வெள்ளி விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.
குறிப்பாக அய்யன் திருவள்ளுவர் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அய்யன் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் 37 கோடி மதிப்பில் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகனாந்தர் பாறையினை இணைத்து கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதைத்தொடர்ந்து, தற்போது அனைத்து சுற்றுலா பயணிகளும் கண்ணாடி இழைப்பாலம் வழியாக நடந்து சென்று அய்யன் திருவள்ளுவர் சிலையினை ஆர்வமுடன் கண்டு வருகிறார்கள்.
மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய சுவர்களில் வண்ணமயமான சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இவற்றினையும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கிறார்கள்.
அத்தோடு மட்டுமல்லாமல், பேரூராட்சி சார்பில் கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் அருகில் உள்ள முக்கோண பூங்காவினை பார்வையாளர்களை கவரும் வகையில் வடிவமைத்தது, அலங்கார வளைவு, விளையாட்டு உபகரணங்கள், லேசர் காட்சிகள் அமைக்கப்பட்டதை சுற்றுலாப்பயணிகள் கண்டு களித்து வருவதோடு, மிக விரைவில் கன்னியாகுமரி சுற்றுலாத்தளத்தினை மேம்படுத்தியதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதன் ஒருபகுதியாக காந்தி நினைவு மண்டபம் அமைந்துள்ள வளாகத்தினை அழகுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பொதுபணித்துறை, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறைகளின் வாயிலாக சுற்றுலாப்பயணிகள் விளையாடி மகிழும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மணக்காவிளை பகுதியை சாரந்த அனிஷ், அவர்களின் கைவண்ணத்தில் தத்துரூபமாக அமைக்கப்பட்ட அண்ணல் காந்தியடி அவர்களும் கர்மவீரர் காமராஜர் அவர்களும் பேசிக்கொண்டிருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளதை அனைத்து சுற்றுலாப்பயணிகளும் ஆர்வமுடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். இச்சிற்பத்தினை மேம்படுத்தும் வகையில் பீடத்தை சுற்றி கிரானைட் கல் பதிக்கவும், சிலையை சுற்றி பூங்கா அமைக்கவும் பேரூராட்சி உதவி பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் முதியோர், மாற்றுத்திறனாளி சுற்றுலாப்பயணிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சக்கர நாற்காலி, மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி, உதவி உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை நேரில் பார்வையிட்டு, தினமும் காலையில் மேற்குறிப்பிட்ட சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துவதை மாற்றுத்திறன் அலுவலர், பேரூராட்சி நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் உள்ளிட்டவர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அய்யன் திருவள்ளுவர் சிலை நூற்றாண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு, திரிவேணி சங்கமம் முதல் சூரிய மறையும் இடம் வரை பேட்டரி வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து பெண் ஓட்டுநர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வுகளில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், உதவி செயற்பொறியாளர் பாண்டிய ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.