» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் இனிமேல் இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் (sanitary certificate) வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதாரச் சான்றிதழ் பெற நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். மேலும் சுகாதாரச் சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் வசதி தமிழ்நாடு அரசின் பொது மைய இணைய சேவை வாயிலாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இனி, அனைத்து விண்ணப்பங்களும் https://www.tnesevai.tn.gov.in என்ற அரசு அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
நேரடியாக (OFFLINE வழியில்) தரப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும். சுகாதாரச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது, தேவையான ஆதார ஆவணங்கள் மற்றும் சுய உறுதிமொழி (Self Declaration) சான்றிதழும் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட இந்த ஆவணங்களை மதிப்பீடு செய்த பின்னர், தகுதியானவர்களுக்கு சுகாதாரச் சான்றிதழ் இணையதளத்தில் (https://www.tnesevai.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்படும்.
இதனை விண்ணப்பதாரர்கள் நேரடியாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். சுகாதாரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள், அந்தச் சான்றிதழின் பிரதியை எடுத்துப் தங்களது நிறுவனங்களில் காட்சிப்படுத்த வேண்டியது கட்டாயம். மேலும், சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.
இந்த நெறிமுறைகளை மீறுவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால், சுகாதாரச் சான்றிதழ் ரத்து செய்யப்படும். இனி வரும் காலங்களில் சுகாதாரச் சான்றிதழ்கள் நேரடியாக வழங்கப்படமாட்டாது. மேலும், சான்றிதழுக்கான விண்ணப்பச் செயல்முறையை எளிமைப்படுத்தவும், முழுமையான மற்றும் விரைவான சேவையை உறுதி செய்யவும், இந்த ஆன்லைன் நடைமுறை மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
