» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!

திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. 

2025-ம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த மையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50/-ஐ விண்ணப்பத்தாரர் டெபிட், கிரெடிட் கார்டுகள், நெட் பேக்கிங், ஜிபே வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.

நேரடி சேர்க்கையில் சேர விரும்புவோர் 8-ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு நகல்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வருகை தர வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூ.750, கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவ/மாணவியருக்கு தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களில் மாதம் ரூ.1000/- உதவித் தொகையாக வழங்கப்படும்.

மாணவர்களுக்கு இலவச உண்டி, உறைவிட வசதியும் உள்ளது. நேரடி சேர்க்கையில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், கன்னியாகுமரி அவர்களை நேரிலோ அல்லது 94435 79558 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.


மக்கள் கருத்து

Blessy Jerina MJul 1, 2025 - 09:59:31 AM | Posted IP 162.1*****

Is it suitable for engineering completed students

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory