» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!

வியாழன் 3, அக்டோபர் 2024 5:39:58 PM (IST)



மார்த்தாண்டம் மேம்பாலத்தின் பழுதடைந்த பகுதியினை உடனடியாக சீரமைக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பழுதினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் மார்த்தாண்டம் பகுதியானது பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஒட்டுநர்கள், பயணிகள், பணிக்கு செல்லும் அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கணோர் வந்து செல்லும் பகுதியாகும். 

போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டம் பம்பம் முதல் குழித்துறை தாமிரபரணி ஆறு செல்லும் சாலை வரை மேம்பாலம் அமைக்கப்பட்டு, அனைவரின் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டது.

தற்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தின் ஒரு பகுதி பழுதடைந்துள்ளதாக அனைத்து கட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் நேற்று இரவு பழுதடைந்த மார்த்தாண்டம் மேம்பால பகுதியினை நேரில் பார்வையிட்டதோடு, பழுதடைந்த பகுதியினை உடனடியாக சீரமைக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory