» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது : 30 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

புதன் 18, டிசம்பர் 2024 8:09:21 AM (IST)



குமரி மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் வீடுகளில் புகுந்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. இதில் தொடர்புடைய மர்ம ஆசாமியை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்பேரில் குளச்சல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்திரசேகரன் மேற்பார்வையில் குளச்சல் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் கடந்த சில நாட்களாக துப்பு துலக்கி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று தனிப்படையினர் குளச்சல் அருகே லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமாக முறையில் ஓட்டம் பிடித்தார். உடனே போலீசார் அந்த ஆசாமியை துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

இதனால் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிப்பட்ட ஆசாமி மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் (54) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் சுந்தர்ராஜ் குளச்சல் பகுதியில் 3 வீடுகளிலும், நித்திரவிளையில் 2 வீடுகளிலும், கொல்லங்கோடு, தக்கலை, கன்னியாகுமாரி ஆகிய பகுதியில் தலா ஒரு வீடுகளிலும் புகுந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 பவுன் தங்க நகைகள், 2½ கிலோ வெள்ளி குத்து விளக்குகள், கற்பூர தட்டுகள் மற்றும் பூஜை பொருட்கள் போன்றவற்றை மீட்டனர். கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory