» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தலைவிரித்தாடும் வேலையின்மை: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விஜய் வசந்த் கோரிக்கை!

செவ்வாய் 17, டிசம்பர் 2024 11:10:28 AM (IST)

நாட்டில் பெருகி வரும் வேலையின்மை குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் வசந்த் எம். பி கோரிக்கை விடுத்துள்ளார். 

நாட்டில் பெருகி வரும் வேலையின்மை குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த அவசர நிலை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் எனவும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்  விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 7.8℅ மட்டுமே. அரசு வேலை வழங்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வருவோம் என கூறிய போதிலும் கடந்த ஒரு வருட கணக்குகள் வேலையின்மை தீவிரமடைந்துள்ளதை  எடுத்து காட்டுகிறது. அரசின் செயல் திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளதை  இது சுட்டிக் காட்டுகிறது.

இரயில்வே துறையில் பயிற்சி முடித்து கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பு இல்லாமல் அவதி படுகின்றனர். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்ற 125 இளைஞர்கள் தங்கள் பணியினை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனியாருக்கு விற்று வருவதும் மக்கள் வேலையை இழப்பதற்கு காரணமாக அமைந்தது. அரசு தனது கொள்கைகளை திருத்தி படித்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை கிடைக்க ஆவன செய்ய வேண்டியது மிக அவசியம் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory