» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஓடும் பேருந்தில் செயின் பறித்த பெண் சிக்கினார் : போலீசில் ஒப்படைத்த பயணிகள்!

செவ்வாய் 17, டிசம்பர் 2024 5:46:27 PM (IST)

நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் செயின் பறித்த பெண்ணை, பயணிகள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று மதியம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. அதில் இளம் பெண் ஒருவரிடம் சிவப்பு சுடிதார் அணிந்த பெண் நகை பறிப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு உஷாரான அந்த இளம் சிவப்பு சுடிதார் அணிந்த பெண் குறித்து கூறினார். அதேநேரம் அந்த பெண் மின்னல் வேகத்தில் இறங்கி தப்பி ஓட முயன்றார். 

அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று விரட்டி பிடித்து அந்த பெண்ணை பேருந்தில் ஏற்றினார்கள். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். நகை கிடைத்த மகிழ்ச்சியில் நகையின் உரிமையாளர் பால்பண்ணை நிறுத்தத்தில் வைத்து பஸ்சில் இருந்து இறங்கி சென்றுவிட்டார். 

தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது அந்த பெண், தப்பி எல்லாம் ஓடமாட்டேன் என்று கூறி அங்கேயே கம்பியை பிடித்தபடி நின்றார். 

அவரை சுற்றியிருந்த பயணிகள் கடுமையாக விமர்சித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் ஜீப்பையும், பெண் போலீசாரையும் வரவழைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஓடும் பேருந்தில் நகைபறிப்பில் ஈடுபட்ட பெண் கையும் களவுமாக சிக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory