» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கஞ்சா கடத்தினால் வங்கி கணக்கு முடக்கப்படும் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை!
வெள்ளி 6, செப்டம்பர் 2024 9:00:05 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் ரூ.1,66,000 மதிப்புள்ள 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் அதுகுறித்த தகவல்களை பொதுமக்கள் 9514194100 என்ற வாட்ஸ்அப் எண் எண்ணில் தயங்காமல் தகவல் தெரிவிக்குமாறும், தகவல் தருபவர்கள் பற்றிய விபரம் இரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19பேர் கைது செய்யப்பட்டு ரூ.1,66,100 மதிப்புள்ள 17 கிலோ கஞ்சா, 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 7பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Public 1Sep 7, 2024 - 09:58:49 AM | Posted IP 162.1*****