» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பார்வையிட்ட பொதுமக்கள், மாணவர்கள்!

வெள்ளி 6, செப்டம்பர் 2024 8:37:52 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்த தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு துறைமுக ஆணையத் தலைவர்  சுசாந்த குமார் புரோஹித், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய துணைத் தலைவர் மற்றும் தலைமை இயந்திரப் பொறியாளரான  வி. சுரேஷ் பாபு, துறைமுக சபை உறுப்பினர்கள், துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்ககள் கலந்து கொண்டனர். வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுகத்தை நேற்று பார்வையிட துறைமுக ஆணையம் அனுமதி அளித்தது. 

இதையடுத்து காலை 9 மணி முதல் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வ.உ.சி. துறைமுகத்திற்கு வருகை தந்தனர். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றிப்பார்க்க பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். துறைமுகத்தில் சரக்குகளை இறக்குவதற்காக வந்து நின்ற கப்பல்களை பார்த்து ரசித்தனர். அந்த கப்பல்களின் முன் நின்று தற்படம் எடுத்துக் கொண்டனர். கப்பல்களில் இருந்து சரக்குகள் இறக்கும் பணியைப் பார்வையிட்டனர்.


மக்கள் கருத்து

BalamuruganSep 7, 2024 - 07:18:13 AM | Posted IP 172.7*****

🙏🙏🙏🙏🙏🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory