» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் இரயில் மீண்டும் இயக்கம் : பயணிகள் மகிழ்ச்சி!

வியாழன் 5, செப்டம்பர் 2024 6:39:45 PM (IST)

திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் இரயில் மீண்டும் அடுத்த 6 மாதங்களுக்கு இயக்கப்படும் என்று தெற்கு ர‌யில்வே அறிவித்துள்ளது.

பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை தினசரி இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், வருகிற கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி முதல் பயணிகள்  ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்த‌து. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்குச்செல்லும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்த ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் இரயில் மீண்டும் அடுத்த 6 மாதங்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) இயக்கப்படும் என்று தெற்கு ர‌யில்வே அறிவித்துள்ளது. ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் மா.பிரமநாயகம் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ரயில் மறியல் போராட்டம் வாபஸ்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி-நெல்லை இடையே வாஞ்சிமணியாச்சி வழியாக பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி, சென்னை ரயில்வே பொதுமேலாளர் மற்றும் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம், ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தேன்.

மேலும் பயணிகள் ரயிலை இயக்கப்படவில்லையென்றால் 06.09.2024 அன்று கிராம மக்களுடன் வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தேன். இதனை தொடர்ந்து நெல்லை-தூத்துக்குடி பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆகையால் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக இருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து

அந்தோணி சாமிSep 6, 2024 - 08:35:33 AM | Posted IP 162.1*****

மணியாச்சியில் ரயில் மறியலுக்கு உள்ள எதிரொளி தான் இந்த ரயில் இயக்கத்திற்கு காரணம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory