» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பக்கிள் ஓடை தூர்வாரும் பணி: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!
வியாழன் 5, செப்டம்பர் 2024 5:59:18 PM (IST)
தூத்துக்குடி பக்கிள் ஓடையில், சொந்த செலவில் தூர்வாரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியில் பக்கிள் ஓடையில் அமலைச் செடிகள் முளைத்து கழிவுநீர் செல்வது தடைபடுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்ததையடுத்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் இன்று தனது சொந்த செலவில் அங்கே தூர்வாரும் பணியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் பத்மாவதி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆனந்த்Sep 6, 2024 - 12:14:02 PM | Posted IP 162.1*****