» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாலியல் துன்புறுத்தல் புகார்களை 1098 எண்ணில் தெரிவிக்கலாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 12:52:25 PM (IST)

குமரி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்களை 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. இதில் நாகர்கோவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் கூட்டரங்கில் அமர்ந்தபடி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைதொடர்ந்து பல்வேறு துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் அழகுமீனா கூறியதாவது: குமரி மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுவது தெரியவந்தால் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுஇடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார்கள் எழுந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் தலைமையில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்களை, உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகளுக்கு தெரியும் வகையில் புகார் பெட்டி அமைக்க வேண்டும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்களை 1098 மற்றும் 181 என்ற கட்டணமில்லா எண்களில் தெரிவிக்கலாம். கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் இருப்பின் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மகளிர் திட்ட இயக்குனர் பாபு, துணை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயமீனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகிலா பானு, கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், துறை அலுவலர்கள், காவல் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்
வியாழன் 30, அக்டோபர் 2025 5:32:00 PM (IST)

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சிறையில் அடைப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 9:14:31 PM (IST)

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)

மோந்தா புயல் எதிரொலி: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!
புதன் 29, அக்டோபர் 2025 10:32:31 AM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு : தூத்துக்குடி பெண்கள் 2பேர் சிக்கினர்!
புதன் 29, அக்டோபர் 2025 8:07:03 AM (IST)

மாத்தூர் தொட்டி பாலத்தில் சீரமைப்பு பணி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தகவல்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:38:19 PM (IST)


.gif)