» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இதுவரை 1,06,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு உங்க கனவ சொல்லுங்க அட்டை : ஆட்சியர்..!

செவ்வாய் 27, ஜனவரி 2026 5:08:31 PM (IST)


குமரி மாவட்டத்தில், இதுவரை 1,06,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு உங்க கனவ சொல்லுங்க அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்திற்குட்பட்ட வெள்ளமடம், சகாயநகர், சுப்ரமணியபுரம் தெரு, தாழக்குடி சந்தைவிளை ஆகிய பகுதிகளில் உங்க கனவ சொல்லுங்க திட்டம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு விளக்கம் அளித்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் கனவ சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தினை 09.01.2026 அன்று திருவள்ளுவர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள மொத்தம் ஊரக பகுதிகளில் – 2,05,262 குடும்பங்களையும், நகர்புறங்களில் 2,92,522 என மொத்தம் 497784 குடும்பங்களையும் இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள ஊரகப்பகுதிகளுக்கு 470 தன்னார்வலர்களும், நகர்ப்புறங்களுக்கு 587 தன்னார்வலர்களும் என மொத்தம் 1057 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

ஒரு குடும்பத்தின் கனவு என்ன என்பதை தெரிந்துகொள்ள, பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வீடு வீடாகச் சென்று, 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை வழங்கி வருகிறார்கள். பொதுமக்களாகிய நீங்கள் எந்தெந்த திட்டங்களில் பயன் பெற்றீர்கள் என அதில் குறிப்பிட வேண்டும். அது மட்டுமல்லாது, உங்களின் மூன்று கனவுகள் என்ன எனவும் கேட்பர். இரண்டு நாட்களுக்கு பின், அவர்களின் வீட்டுக்கு மீண்டும் சென்று, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று, அந்த விபரங்களை மொபைல்போன் செயலியில் பதிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு எண்ணுடன் கனவு அட்டை வழங்கப்படும். இதுவரை 1,06,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு உங்க கனவ சொல்லுங்க அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக தோவாளை வட்டம், வெள்ளமடம் ஊராட்சிக்குட்பட்ட சுப்ரமணியபுரம் தெரு, சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட சகாயநகர், தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட சந்தைவிளை ஆகிய பகுதிகளில் உங்க கனவ சொல்லுங்க திட்டம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்த விவரங்களை கைப்பேசி செயலி மூலம் தரவுகள் சேகரிக்கப்பட உள்ளது. கணக்கெடுப்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கனவு அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து, இத்திட்டம் குறித்த விவரங்கள் சேகரிக்கும்போது, முழு ஒத்துழைப்பு தர பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட திட்டுவிளை பேரூந்து நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வில் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் கலைச்செல்வி, தன்னார்வலர்கள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory