» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண் வெளியிட்ட வீடியோ எதிரொலி: சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை!
ஞாயிறு 25, ஜனவரி 2026 1:50:08 PM (IST)
பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து திருக்கோவில் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் உள்ளது. இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் ஒரே லிங்கத்தில் காட்சியளிப்பதுடன், 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது. இந்நிலையில் கடந்த மார்கழி மாத திருவிழாவின் போது கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது கோவிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் மூலஸ்தானம், ஆஞ்சநேயர் சன்னதி என முக்கிய சிற்பங்கள் மற்றும் சாமி சிலைகளை வீடியோ எடுத்ததுடன் அதனை ‘ரீலஸ்’சாக வெளியிட்டனர். இது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட பெண் மீது சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அந்த பெண்ணை, காவல் நிலையம் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் உள்ளே செல்போன் கொண்டு செல்ல நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுபற்றி பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கோவிலை சுற்றிலும் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பக்தர்கள் யாரேனும் செல்போன் கொண்டு சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால் அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன், போலீசில் வழக்கு தொடரப்படும் என்று திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

இரணியல், குழித்துறையில் புதிய நிறுத்தம் அனுமதி இல்லை : பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 23, ஜனவரி 2026 12:00:43 PM (IST)

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்
வெள்ளி 23, ஜனவரி 2026 11:15:57 AM (IST)

கோதையாற்றில் முதலை நடமாட்டம்: படகுகளில் சென்று வனத்துறை தேடுதல் வேட்டை!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:55:13 AM (IST)

இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி மோசடி : பெண் கைது...!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:50:38 AM (IST)

திமுக கூட்டணியை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் மிரட்டுகிறாா்கள் : கி.வீரமணி பேட்டி
வெள்ளி 23, ஜனவரி 2026 10:45:12 AM (IST)

