» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!

புதன் 28, ஜனவரி 2026 10:47:30 AM (IST)

மணக்குடியில் வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் மற்றும் பெண்கள் பலர் காயம் அடைந்துள்ளனர். 

குமரி மாவட்டத்தில் நாய் கடியால் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 333 பேர் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணக்குடியில் வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆனி ஆடிட், லிசி, அமலா மேரி, தங்கம், மேரி ஸ்டெல்லா ஆகிய பெண்கள் பலத்த காயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், மூன்று குழந்தைகளுக்கு தலை மற்றும் முகத்தின் பல்வேறு இடங்களில் நாய் கடித்திருக்கிறது. மேலும் பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணக்குடி மீனவ கிராமத்தில் தினமும் சுற்றி திரியும் தெரு நாய் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் நாய்கள் தொல்லை என பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory