» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மடிக்கணினிகளை 2 தினங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தல்
புதன் 28, ஜனவரி 2026 5:41:21 PM (IST)

அரசு உதவி பெறும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்களுக்கான மடிக்கணினிகளை இரண்டு தினங்களில் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் வரப்பெற்ற மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (28.01.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த 10 இலட்சம் மாணவ மாணவியர்க்கு முதற்கட்டமாக மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தினை 05.01.2026 அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 12 அரசு கல்லூரிகள் மற்றும் 17 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 2,182 மாணவர்களுக்கு முதற்கட்டமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக 15 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு குறிப்பாக நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் பயிலும் 695 மாணவ மாணவியர்களுக்கும், நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரியில் பயிலும் 708 மாணவ மாணவியர்களுக்கும், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் பயிலும் 269 மாணவ மாணவியர்களுக்கும், ஆரால்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் பயிலும் 231 மாணவ மாணவியர்களுக்கும், நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் பயிலும் 157 மாணவ மாணவியர்களுக்கும், நெய்யூர் லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 216 மாணவ மாணவியர்களுக்கும், துாத்துார் புனித ஜூட்ஸ் கல்லூரியில் பயிலும் 165 மாணவ மாணவியர்களுக்கும், சுங்காங்கடை ஸ்ரீ அய்யப்பா பெண்கள் கல்லூரியில் பயிலும் 198 மாணவ மாணவியர்களுக்கும்,
நிர்மலா கல்வி நிறுவனத்தில் பயிலும் 93 மாணவ மாணவியர்களுக்கும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ -சுயநிதி கல்லூரியில் பயிலும் 525 மாணவ மாணவியர்களுக்கும், காமராஜ் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் 175 மாணவ மாணவியர்களுக்கும், நாகர்கோவில் புனித சிலுவை -சுயநிதி கல்லூரியில் பயிலும் 433 மாணவ மாணவியர்களுக்கும், குழித்துறை ஸ்ரீ குமாரி பெண்கள் கல்லூரியில் பயிலும் 232 மாணவ மாணவியர்களுக்கும், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் பயிலும் 427 மாணவ மாணவியர்களுக்கும் என மொத்தம் 4524 மாணவ மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த கல்லூரிகளுக்கு அணுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இம்மடிக்கணினிகளை கல்லூரி முதல்வர்கள், தாளாளர்கள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாகவும் மடிக்கணினிகள் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கவேண்டுமென தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள கல்லூரிகளை சார்ந்த மாணவ மாணவியர்கள் தங்களுக்கான மடிக்கணினிகளை இரண்டு தினங்களுக்குள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொத்தவிளை கடற்கரையில் கடல் உள்வாங்கியது!
புதன் 28, ஜனவரி 2026 5:55:38 PM (IST)

வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!
புதன் 28, ஜனவரி 2026 10:47:30 AM (IST)

இதுவரை 1,06,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு உங்க கனவ சொல்லுங்க அட்டை : ஆட்சியர்..!
செவ்வாய் 27, ஜனவரி 2026 5:08:31 PM (IST)

கன்னியாகுமரியில் 77-வது குடியரசு தினவிழா: ஆட்சியர் அழகுமீனா தேசியக்கொடி ஏற்றினார்!
திங்கள் 26, ஜனவரி 2026 12:43:43 PM (IST)

பெண் வெளியிட்ட வீடியோ எதிரொலி: சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை!
ஞாயிறு 25, ஜனவரி 2026 1:50:08 PM (IST)

நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

