» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்.

வெள்ளி 2, ஜனவரி 2026 12:29:19 PM (IST)



நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், வாய்ஸ் ஓவர் வைஃபை அழைப்பை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது.

இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நாடு தழுவிய அளவில் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை இந்த புத்தாண்டில், அறிமுகம் செய்துள்ளது.

இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யும். ‘வைஃபை நெட்வொர்க்’ மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இது உதவுகிறது.

வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான ‘மொபைல் சிக்னல்’ உள்ள இடங்களில் தெளிவான மற்றும் நம்பகமான இணைப்பை இது உறுதி செய்கிறது. இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன்களில் ‘வைஃபை காலிங்’ என்பதை மட்டும் ‘செட்டிங்ஸ்’ அமைப்பில் இயக்க வேண்டும். இந்த தகவல்களை தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thoothukudi Business Directory