» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:57:11 AM (IST)
பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இன்று 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடும் குளிர், பனி மற்றும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலையிலேயே பனி படர்ந்து தெளிவற்ற வானிலை நிலவியது. டெல்லி நகரின் பல்வேறு பகுதிகள் பனிப்போர்வை போர்த்தியது போன்று உள்ளது. பகல் நேரத்திலும் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றன.
கடந்த சில நாட்களாக டெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. சில சமயங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இன்று மொத்தமாக 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
60 விமானங்களின் புறப்பாடு மற்றும் 58 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் விமான சேவை ரத்துசெய்யப்பட்டன. வானிலை சற்று சீரான பிறகு படிப்படியாக விமான சேவைகள் இயக்கப்படும் என டெல்லி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு: மும்பையில் சோகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:26:02 PM (IST)

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள் : அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:59:28 AM (IST)

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள்: டெல்லி அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:29:38 PM (IST)

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி!!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:15:11 PM (IST)

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு
சனி 27, டிசம்பர் 2025 3:48:59 PM (IST)



.gif)