» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு: மும்பையில் சோகம்!

செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:26:02 PM (IST)



மும்பையில் ரிவர்ஸ் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். 

மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் பாண்டூப் (Bhandup) ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஸ்டேஷன் சாலையில், ரிவர்ஸ் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து மாநகர் அரசுப்பேருந்து (BEST bus) அங்கு நின்றிருந்த பாதசாரிகள் மற்றும் பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 

இவ்விபத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் (52) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory