» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள் : அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:59:28 AM (IST)



ராஜஸ்தானில் இளைஞர் விழுங்கிய இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் டூத் பிரஷ்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதாவது, இளைஞரின் வயிற்றுக்குள் இரும்பு ஸ்பேனர் மற்றும் டூத் பிரஷ் ஆகியவை இருப்பது ஸ்கேன் மூலம் தெரிய வந்தது.

இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் இளைஞரின் வயிற்றில் இருந்த இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். மொத்தம் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் 2 இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் 7 டூத் பிரஷ்கள் அகற்றப்பட்டன. தற்போது அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இளைஞர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பதும் இதனால் இத்தகைய பொருட்களை அவர் விழுங்கி இருப்பதும் தெரியவந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory