» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

துரந்தர் திரைப்படத்திற்கு லடாக்கில் வரி விலக்கு : ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவிப்பு

வெள்ளி 2, ஜனவரி 2026 3:47:34 PM (IST)



ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் திரைப்படத்திற்கு லடாக்கில் வரி விலக்கு அளிப்பதாக துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவித்துள்ளார்.

ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான துரந்தர் திரைப்படம் கடந்த டிச.5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வளைகுடா நாடுகளில் இந்தப் படம் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. பாகிஸ்தான் நாட்டிற்கு ஒற்றனாகச் செல்லும் ரன்வீர் சிங்கின் நடிப்பு படத்தின் உருவாக்கம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

வலதுசாரி சிந்தனை, பிரிவினை வாதம் தூண்டுவதாக சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன. நடிகர் ஹிருத்திக் ரோஷனும் இந்தப் படத்தின் அரசியல் குறித்து தனக்கு விருப்பமில்லை எனக் கூறியது சர்ச்சையானது.

கடந்த டிச. 29ஆம் தேதி வரைக்கும் மட்டுமே உலக அளவில் இந்தப் படம் ரூ.1,100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்தப் படம் இந்தியாவில் மட்டும் இன்றுவரை ரூ.784.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விரைவில் இந்தியாவிலேயே ரூ. 1,000 கோடியை எட்ட வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், லடாக்கின் துணைநிலை ஆளுநர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: பாலிவுட் திரைப்படமான ‘துரந்தர்’ படத்துக்கு லடாக்கில் வரி விலக்கு அளிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவித்துள்ளார்.

லடாக்கில் விரிவாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தினால் லடாக் சினிமாட்டிக் அனுபவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இயக்குநருக்கு ஆதரவு தெரிவிக்கவும் மேலும் இங்கு அதிகமானோர் படப்பிடிப்பு நடத்த ஊக்குவிக்கவும் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thoothukudi Business Directory