» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா மத்தியஸ்தம்? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
வியாழன் 1, ஜனவரி 2026 11:24:39 AM (IST)
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா மத்தியஸ்தம் செய்ததா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்த, இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ நேற்று அளித்த பேட்டியில், "இந்தாண்டில் சீனா தலையிட்ட முக்கிய விஷயங்களின் பட்டியலில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமும் ஒன்று” என குறிப்பிட்டார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அதிபர் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அதேபோன்ற கருத்தை சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். இது நாட்டின் பாதுகாப்பை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது.
அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் சீனா தொடர்ந்து எதிராக செயல்படுகிறது. இது போன்ற சூழலில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் சீனா ஆற்றிய பங்கு என்ன என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
புதன் 31, டிசம்பர் 2025 8:43:39 PM (IST)

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்
புதன் 31, டிசம்பர் 2025 12:11:35 PM (IST)

கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு: மும்பையில் சோகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:26:02 PM (IST)

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள் : அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:59:28 AM (IST)

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:57:11 AM (IST)

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள்: டெல்லி அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:29:38 PM (IST)



.gif)