» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

சனி 24, மே 2025 5:47:07 PM (IST)

ஆந்திராவில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 

ஆந்திரா மாநிலம், பாபட்டலா மாவட்டம் ஸ்டுவர்ட்டுபுரத்தை சேர்ந்த 8 பேர் காரில் நந்தியாலா மாவட்டம் மகாநதியில் சாமி தரிசனம் செய்தனர். நேற்று தரிசனம் முடிந்து காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். பிரகாசம் மாவட்டம் தடி செர்லா மோட்டு என்ற இடத்தில் கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த லாரியின் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.  விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory