» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: 4 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
சனி 24, மே 2025 12:28:31 PM (IST)
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இன்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு 6 நாள்களுக்கு முன்னதாகவே கேரளத்தில் பருவமழை தொடங்கியுள்ளது.
கடந்த 2000 - 2025 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி பருவமழை தொடங்கியதே மிகவும் முன்கூட்டிய பருவமழை தொடக்கமாக இருந்தது. இதன்பின்னர் தற்போது 2025ல் மே 24ல் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக 1990 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதியே கேரளத்தில் பருவ மழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரிக்கு வட மேற்கே 40 கிலோ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது இன்று முற்பகலில் கரையைக் கடக்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆந்திராவில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு!
சனி 24, மே 2025 5:47:07 PM (IST)

மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சனி 24, மே 2025 4:44:41 PM (IST)

கேரளாவில் தொடரும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!
வெள்ளி 23, மே 2025 5:29:42 PM (IST)

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது: இந்தியா உறுதி!
வெள்ளி 23, மே 2025 12:13:57 PM (IST)

கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!
வியாழன் 22, மே 2025 4:34:48 PM (IST)

தமிழகம் உட்பட நாடு முழுதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
வியாழன் 22, மே 2025 4:03:10 PM (IST)
