» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் தொடரும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!

வெள்ளி 23, மே 2025 5:29:42 PM (IST)

கேரளாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், 12 மாவட்டங்களில் அதிகனமழைக்கான மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், ஓரிரு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மே 26ம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த சமயங்களில் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய  12 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கண்ணூர், காசர்கோடு மஞ்சள் அலர்ட்; பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டடங்களில் நாளை மறுநாள் (மே 25) ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மே 26: ஆரஞ்ச் அலர்ட் ; திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடுமஞ்சள் அலர்ட்; திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்யும். 11 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யும். மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் 6 செ.மீ., முதல் 11 செ.மீ., மழை பொழிவு இருக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory