» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்!!

புதன் 21, மே 2025 10:52:30 AM (IST)



பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' புக்கர் பரிசை வென்றுள்ளது. 

இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார். எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் வழக்குரைஞர் என பன்முகத்தன்மை கொண்டவரான பானு முஷ்டாக் கன்னடத்தில் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தை, பத்திரிகையாளரான தீபா பாஸ்தி என்பவர், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 'ஹார்ட் லேம்ப்' என வெளியிட்டார்.

இப்புத்தகத்தில் தென்னிந்தியாவில் வாழும் முஸ்லீம் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை புத்திசாலித்தனத்துடனும், நிதானத்துடனும் 1990 முதல் 2023 வரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக 30 ஆண்டுகள் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பான 'ஹார்ட் லேம்ப்' சர்வதேச புக்கர் விருதை வென்று அசத்தியுள்ளது.

நடப்பாண்டு புக்கர் பரிசு பட்டியலில் இவரின் 'ஹார்ட் லேம்ப்’ என்ற புத்தகத்துடன் சேர்த்து மொத்தம் 6 புத்தகங்கள் போட்டியில் இருந்தன. தற்போது அவரின் 'ஹார்ட் லேம்ப்' புத்தகம் புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எழுத்தாளர் பானுவுக்கும், மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்திக்கும் பரிசுத்தொகையான 50,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.48 லட்சம்) சமமாக பகிர்ந்தளிக்கப்படும். இதற்கு முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், கீதாஞ்சலிஸ்ரீ மற்றும் மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல் ஆகியோரின் ஹிந்தி நாவலான 'டோம்ப் ஆஃப் சாண்ட்' இந்தியா சார்பில் முதலாவது புக்கர் பரிசை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory