» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!

வியாழன் 22, மே 2025 4:34:48 PM (IST)



ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா புறப்பட்டனர். 

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான குழு இன்று (22/05/2025) ரஷியாவுக்கு புறப்பட்டனர். அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த குழுவில், சமாஜ்வாதி கட்சியை சார்ந்த எம்.பி ராஜீவ் ராய், பாஜக கட்சியை சார்ந்த எம்.பி கேப்டன் ப்ரஜேஷ் சௌட்டா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.பி பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி கட்சி கட்சியை சார்ந்த அசோக் குமார் மித்தல், தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.


மக்கள் கருத்து

SURYAமே 23, 2025 - 02:09:35 PM | Posted IP 162.1*****

தலைப்பு தவறு, அவர் தலைமையில் என்பது எந்த செய்திகளிலும் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory