» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை : வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி!
வெள்ளி 2, மே 2025 12:18:18 PM (IST)
இந்திய வானிலை ஆய்வு மையம், சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் டெல்லியில் பலத்த மழை பெய்தது. வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உட்பட 4பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. அந்த வகையில் லாஜ்பத் நகர், ஆர்கே புரம், துவாராகா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் டெல்லியில் நாளை வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக டெல்லியின் ஜாபர்பூர் காலா பகுதியில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்ததில் 3 குழந்தைகள், ஒரு பெண் என 4பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், டெல்லியின் சாவாலாவில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) நாட்டின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்தில் தினந்தோறும் சுமார் 1,300 விமான இயக்கங்கள் கையாளப்படுகின்றன. இதனிடையே, மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் சுமார் 200 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளது. வானிலை சீரான பிறகு விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
இன்று வானிலை பாதகமான வானிலை காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் இருந்த போதிலும், டெல்லி விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆந்திராவில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு!
சனி 24, மே 2025 5:47:07 PM (IST)

மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சனி 24, மே 2025 4:44:41 PM (IST)

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: 4 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
சனி 24, மே 2025 12:28:31 PM (IST)

கேரளாவில் தொடரும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!
வெள்ளி 23, மே 2025 5:29:42 PM (IST)

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது: இந்தியா உறுதி!
வெள்ளி 23, மே 2025 12:13:57 PM (IST)

கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!
வியாழன் 22, மே 2025 4:34:48 PM (IST)
