» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கொழும்புவில் பாகிஸ்தானை எதிர்கொள்வது சவால்: இந்திய உதவிப் பயிற்சியாளர் தகவல்
புதன் 11, பிப்ரவரி 2026 12:32:07 PM (IST)
கொழும்புவில் நடைபெறும் டி20 உலக கோப்படை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்வது சவால் என்று இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி உறுதியாகியுள்ள நிலையில், "பாகிஸ்தானை அவர்கள் பழகிய சூழலில் (கொழும்பு) எதிர்கொள்வது சவாலானது" என இந்திய உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட் தெரிவித்துள்ளார்.அரசியல் சூழல்களைக் கடந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதாகவும், பாகிஸ்தான் ஆட்டம் குறித்து முன்பே கணித்ததால் பயிற்சியில் எந்தத் தொய்வும் இல்லை என்றும் டஸ்சேட் கூறியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக பாகிஸ்தான் கொழும்புவிலேயே தங்கி விளையாடி வருவதால், அங்கிருக்கும் ஆடுகளத்தன்மை அவர்களுக்குச் சாதகமாக இருக்கக்கூடும்.
நெருக்கடியான அட்டவணை: பாகிஸ்தான் அணிக்கு நான்கு நாட்கள் ஓய்வு உள்ள நிலையில், இந்திய அணி டெல்லியில் நமீபியாவுடன் விளையாடிவிட்டு, போதிய ஓய்வின்றி உடனடியாகக் கொழும்பு செல்ல வேண்டியுள்ளது. சவால்கள் இருந்தாலும், 2022 அக்டோபர் முதல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய கடைசி 5 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி: லீக் ஆட்டங்களில் தமிழ்நாடு, பெங்களூரு அணிகள் அதிரடி வெற்றி!
செவ்வாய் 26, மே 2026 9:07:18 AM (IST)

மாநில கால்பந்து போட்டி: சென்னையை வீழ்த்தி காயல்பட்டினம் அணி அரையிறுதிக்கு தகுதி!
திங்கள் 25, மே 2026 8:50:39 AM (IST)

அகில இந்திய ஹாக்கி: ஜலந்தர், மும்பை அணிகள் வெற்றி!
திங்கள் 25, மே 2026 8:22:12 AM (IST)

மும்பையை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தது ராஜஸ்தான்! – பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகள் வெளியேற்றம்!
ஞாயிறு 24, மே 2026 8:58:42 PM (IST)

சென்னை அணி மீண்டும் கம்பீரமாக வலம் வரும் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!
வெள்ளி 22, மே 2026 5:15:04 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைத்தது ராஜஸ்தான்!
புதன் 20, மே 2026 5:15:00 PM (IST)


