» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அகில இந்திய ஹாக்கி: ஜலந்தர், மும்பை அணிகள் வெற்றி!
திங்கள் 25, மே 2026 8:22:12 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15-ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின் 4-ஆம் நாள் லீக் ஆட்டங்களில் ஜலந்தர் ஆர்மி கிரீன், ஜலந்தர் பஞ்சாப் சிந்து வங்கி மற்றும் மும்பை இந்தியன் நேவி ஆகிய வலுவான அணிகள் தங்களது ஆட்டங்களில் அபார வெற்றி பெற்றுள்ளன.
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில், ஜலந்தர் ஆர்மி கிரீன் அணியும், கர்நாடக ஹாக்கி பெல்லாரி அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஜலந்தர் ஆர்மி கிரீன் அணி 5-2 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணியை எளிதில் வீழ்த்தி உத்தியோகப்பூர்வ வெற்றி பெற்றது.
மாலையில் நடைபெற்ற விறுவிறுப்பான இரண்டாவது லீக் ஆட்டத்தில், ஜலந்தர் பஞ்சாப் சிந்து வங்கி அணியை எதிர்த்து, சென்னை சரக்கு, சேவை வரி மற்றும் மத்திய உற்பத்தி வரி அணி களம் கண்டது. இதில் அதிரடியாக விளையாடிய ஜலந்தர் பஞ்சாப் சிந்து வங்கி அணி 5-2 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்திப் புள்ளிகள் பட்டியலில் முன்னேறியது.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன் நேவி அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதின. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மும்பை இந்தியன் நேவி அணி, எதிரணியினருக்கு ஒரு கோல் கூட அடிக்க வாய்ப்பு தராமல் 7-0 என்ற இமாலய கோல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணியை துவம்சம் செய்தது. நான்காவது ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியும், உள்ளூர் அணியான கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணியும் மோதின.
இன்றைய 5-ஆம் நாள் ஆட்டங்கள் விபரம் (மே 25 - திங்கள்கிழமை):
காலை 06:30 மணி (முதல் ஆட்டம்): ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு (Hockey Unit of Tamil Nadu) எதிர் பெங்களூரு ஹாக்கி கர்நாடகா (Hockey Karnataka).
மாலை 05:00 மணி (இரண்டாம் ஆட்டம்): பெங்களூரு சதர்ன் கமெண்ட் (Southern Command Bengaluru) எதிர் சென்னை வருமான வரித்துறை (Income Tax Chennai).
மூன்றாம் ஆட்டம்: செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே (South Central Railway Secunderabad) எதிர் புதுதில்லி காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா (CAG Delhi).
நான்காம் ஆட்டம்: புதுதில்லி இந்தியன் விமானப்படை (Indian Air Force) எதிர் ஜாம்ஷெட்பூர் நேவல் டாடா ஹாக்கி அகாதெமி (Naval Tata Hockey Academy).
தேசிய அளவிலான முன்னணி வீரர்கள் கோவில்பட்டி மைதானத்தில் திரண்டு விளையாடி வருவதால், ஹாக்கி போட்டிகளைக் காண உள்ளூர் விளையாட்டுப் ரசிகர்கள் தற்போதே மைதானத்தில் திரண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: கே.எல்.ராகுல், சுப்மன் கில் அதிரடி சதம்!
சனி 6, ஜூன் 2026 5:26:51 PM (IST)

இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார் சூர்யவன்ஷி : சச்சின் சாதனை முறியடிப்பு!
சனி 6, ஜூன் 2026 4:47:09 PM (IST)

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம் ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!
சனி 6, ஜூன் 2026 4:41:43 PM (IST)

ஐபிஎல் 2026 சாம்பியன்: குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்த ஆர்சிபி அணி!
திங்கள் 1, ஜூன் 2026 12:32:33 PM (IST)

சுப்மன் கில் அபார சதம்: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத்!
சனி 30, மே 2026 11:20:46 AM (IST)

மாநில கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி சாம்பியன்: சார் ஆட்சியர் சுழற்கோப்பையை வழங்கினார்!
வெள்ளி 29, மே 2026 8:40:23 AM (IST)


