» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ச.ஜோசப் விஜய் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 11:54:09 AM (IST)

பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ச.ஜோசப் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்குத் தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதல்வர் ச.ஜோசப் விஜயுடன் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ் உட்படப் பல அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகள் சுருக்கம்:
விருதுநகரில் 1903-ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று பிறந்த காமராஜர், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
ஆட்சி நிர்வாகம்: 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.
கல்விப் புரட்சி: கிராமங்கள்தோறும் தொடக்கப் பள்ளிகளை நிறுவியதோடு, ஏழை மாணவர்களுக்காக 1956-ஆம் ஆண்டில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
வேளாண் வளர்ச்சி: மணிமுத்தாறு, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி மற்றும் பரம்பிக்குளம் உள்ளிட்ட பல அணைகளைக் கட்டி நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினார்.
தொழில்துறை: பிஎச்இஎல் (BHEL), என்எல்சி (NLC), ஐசிஎப் (ICF) போன்ற முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தார்.
தேசிய அரசியல்: அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்று, இருமுறை இந்தியப் பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்ததால் 'கிங் மேக்கர்' என்று அழைக்கப்பட்டார். இவருக்கு 1976-ஆம் ஆண்டு மரணத்திற்குப் பின் 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்!
புதன் 15, ஜூலை 2026 12:20:08 PM (IST)

தூத்துக்குடியில் அரசு மருத்துவர் தற்கொலை : வீடியோ காலில் மனைவியுடன் பேசிவிட்டு விபரீத முடிவு!
புதன் 15, ஜூலை 2026 10:42:51 AM (IST)

தமிழகத்தில் 2,144 பேருக்குப் பணி நியமன ஆணைகள்: முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:55:43 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி? மு.வீரபாண்டியன் விளக்கம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:36:53 PM (IST)

தமிழகத்தில் 16-ஆம் தேதி வரை வெயில் அதிகரிக்கும்: வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் உயர வாய்ப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:28:17 PM (IST)

ஆண்டிபட்டி கிராமத்தில் எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
செவ்வாய் 14, ஜூலை 2026 5:10:32 PM (IST)


