» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த சூறாவளி காற்று: 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

செவ்வாய் 30, ஜூன் 2026 10:24:04 AM (IST)



தூத்துக்குடி கடற்பகுதியில் வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 272 விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்தனர். தற்போது மீன்பாடு அதிகமாக இருந்ததால் விசைப்படகு உரிமையாளர்களும் மீனவர்களும் தொழில் ரீதியாகச் சாதகமான சூழலில் இருந்து வந்தனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினசரி காலை 5 மணிக்கு 272 விசைப்படகுகளில் கடலுக்குப் புறப்படும் மீனவர்கள், இரவு 9 மணிக்குக் கரை திரும்புவது வழக்கமாக இருந்தது.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 29) முதல் கடலில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்தது. கடல் சீற்றத்தினால் விசைப்படகுகளைச் செலுத்துவதிலும், மீன்பிடிப்பதிலும் மீனவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து மீனவர்கள் விசைப்படகு உரிமையாளர்களுக்குத் தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினர். கடலில் தற்போது மணிக்கு 60 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், பாதுகாப்பு கருதி இன்று (ஜூன் 30) கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் இன்று தொழிலுக்குச் செல்லாததால், அவர்களின் வாழ்வாதாரம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory