» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாயமான 5 வயது சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு: கிணற்றில் வீசிக்கொலை செய்த பெண் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:39:41 AM (IST)
ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி கிணற்றில் வீசிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அச்சிறுமியின் உறவினரான சபரிகா என்பவரை நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மதுரை பைகாரா முத்துராமலிங்கபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாலகணேஷ் (32). இவருடைய மனைவி கார்த்திகைச்செல்வி (28). இவர்களுக்குச் சாய் தீப்தி, சாரு நித்திகா என்ற 5 வயது இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்திகைச்செல்வி தனது மகள்களுடன் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரில் உள்ள தந்தை முத்துமுருகன் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது, நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி சாய் தீப்தி திடீரென மாயமானார். தேடுதலுக்குப் பின், அருகில் உள்ள உறை கிணற்றில் சிறுமி பிணமாக மீட்கப்பட்டார்.ராமநாதபுரம் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கார்த்திகைச்செல்வியின் தம்பி அஜித்குமாரின் மனைவி சபரிகா (22) என்பவருக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சபரிகா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "காதல் திருமணம் செய்துகொண்ட தனக்கும் கணவர் குடும்பத்தினருக்கும் இடையே சுமுக உறவு இருக்கவில்லை என்றும், தனது 11 மாதக் குழந்தை மாற்றுத்திறனாளியாகப் பிறந்ததால் குடும்பத்தினரின் புறக்கணிப்பு அதிகரித்ததாகவும்" தெரிவித்துள்ளார். மேலும், கார்த்திகைச்செல்வியின் குழந்தைகளுக்குக் காதணி விழா நடத்தத் தனது நகைகளைக் கேட்டதாலும், குடும்பத்தினர் அக்குழந்தைகளை மட்டும் கவனித்து வந்ததாலும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இக்கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் தூங்கிய நேரத்தில் சிறுமியைத் தூக்கிச் சென்று வீட்டின் பின்புறமிருந்த உறை கிணற்றுக்குள் வீசிக் கொன்றதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சபரிகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு : தமிழக அரசு உத்தரவு
செவ்வாய் 30, ஜூன் 2026 10:30:31 AM (IST)

தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த சூறாவளி காற்று: 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 10:24:04 AM (IST)

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:41:43 AM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் மாங்கனித் திருவிழா: காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேகம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:37:32 AM (IST)

சொத்து முடக்கம் நீக்கத்திற்கு எதிரான வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:33:32 AM (IST)

நடுக்கடலில் தத்தளித்த மாலத்தீவு சரக்குக் கப்பல்: கடலோரக் காவல் படை விரைந்து மீட்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:21:22 AM (IST)


