» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (25.06.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, மாவட்ட வன அலுவலர் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் 48.98 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை விட 28.89 விழுக்காடு அதிகமாகும். மேலும், நடப்பு ஜூன் மாதத்தில் 24-ஆம் தேதி வரை 68.31 மி.மீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, மே மாதத்தில் 3904.415 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 187.77 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலைப்பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களைச் சரிபார்த்து 'வேளாண் அடுக்ககம்' வலைதளத்தில் பதிவேற்றும் திட்டத்தின் கீழ் இதுவரை 46,797 விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பதிவு செய்யாத 7,729 விவசாயிகள் உடனடியாகப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பி.எம்.கிசான் திட்டத்தில் இ-கேவவ்பி (e-KYC) நிலுவையில் உள்ள 1,351 பயனாளிகளுக்கும், வங்கிக்கணக்குடன் எண் இணைப்பு செய்யாத 936 பயனாளிகளுக்கும் சிறப்பு முகாம்கள் வரும் ஜூன் 30 வரை நடத்தப்படவுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி குப்பக்குறிச்சி, நாரணம்மாள்புரம், அழகியபாண்டியபுரம், முன்னீர்பள்ளம், பாப்பாக்குடி உட்பட 13 கிராமங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் 28 கிராமங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் ஜூன் 23 வரை 73 விவசாயிகளுக்கு ரூ.1.010 கோடி பயிர்க்கடனும், கால்நடைத்துறை மூலம் 286 விவசாயிகளுக்கு ரூ.2.670 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் நேரடி நெல் விதைப்பு அல்லது இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம் வழங்கப்படுகிறது. இதற்குத் தகுதியான விவசாயிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கூட்டத்தின் நிறைவாக, உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்குப் பலலாயிர மதிப்புள்ள உரம் மற்றும் உற்பத்தி இடுபொருட்களை ஆட்சியர் ஆனந்த் மோகன் வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலைப் பணிகளில் ரூ.3.23 கோடி மோசடி : எ.வ.வேலு வீடு உட்பட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
வியாழன் 25, ஜூன் 2026 5:19:51 PM (IST)

நலத்திட்டங்களுக்கு மட்டுமே கடன் தொகையைச் செலவிடுவது சரியல்ல : நிர்மலா சீதாராமன்
வியாழன் 25, ஜூன் 2026 4:55:55 PM (IST)

திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட கல்வி மையம்: விஜய் வந்தவுடன் ஒப்புதல் - ஸ்ரீதர் வேம்பு நன்றி
வியாழன் 25, ஜூன் 2026 4:10:31 PM (IST)

அப்பாவை அங்கு தேடாதீர்கள்! - முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு ஸ்டாலின் பதிலடி!
வியாழன் 25, ஜூன் 2026 12:36:37 PM (IST)

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்: பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2பேர் கைது!
வியாழன் 25, ஜூன் 2026 12:15:04 PM (IST)

மின்வாரியத்திற்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல் குமார்!
வியாழன் 25, ஜூன் 2026 12:05:59 PM (IST)


