» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் புதிய அரசுப் பேருந்துகளின் சேவை : முதல்வர் விஜய் தொடங்கி வைத்து பயணம்!

வியாழன் 25, ஜூன் 2026 11:41:03 AM (IST)



சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய அரசுப் பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பொதுப் பேருந்தில் நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துப் பயணம் மேற்கொண்டார்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உட்பட 6 கோட்டங்களுக்காக வாங்கப்பட்டுள்ள 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று வியாழக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் செல்லும் '29ஏ' தடம் எண் கொண்ட அரசுப் பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய், அங்கு பணியில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர், அந்தப் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்டார்.

பேருந்து பயணத்தின் போது, நடத்துனரிடம் அவரே நேரில் பணம் கொடுத்துப் பயணத்திற்கான டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, நடத்துனரைத் தனது அருகில் அமரச் செய்து, அவர்களின் அன்றாடப் பணிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஓட்டுநரின் அருகே உள்ள முன்புற இருக்கைக்குச் சென்ற முதல்வர் விஜய், தனது சொந்த மொபைல் போன் மூலம் சாலையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்களையும், தனது பேருந்து பயண அனுபவத்தையும் அவரே வீடியோவாகப் பதிவு செய்து கொண்டார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டுப் பேருந்து மூலம் கலங்கரை விளக்கம் வரை பயணித்த முதல்வர் விஜய், பின்னர் அதே பேருந்திலேயே மீண்டும் தலைமைச் செயலகத்திற்குத் திரும்பினார். இச்சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory