» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)

கங்கைகொண்டான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அரசுத் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பல்வேறு புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கங்கைகொண்டான் பகுதியில் உள்ள இலங்கைவாழ் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இன்று நேரிடை ஆய்வு மேற்கொண்டார்.
இப்பகுதியில் வசிக்கும் 657 இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகள் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளின் கட்டுமானத் தரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அங்குள்ள மக்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். தொடர்ந்து, முகாம் வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற அவர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், கல்வி கற்பிக்கும் முறைகள் மற்றும் குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம், எடைப் பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன் குழந்தைகளுடனும் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் துறையூர் பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நீதி மாணவர் விடுதியின் செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை விபரங்கள் மற்றும் கல்வித் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் விடுதியின் அடிப்படைத் தூய்மை வசதிகள் குறித்தும் அவர் விரிவாகப் பார்வையிட்டார்.
நிறைவாக, கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், உள்நோயாளி படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகளின் கையிருப்பு நிலவரம் மற்றும் தினசரிப் பராமரிப்புப் பதிவேடுகள் ஆகியவற்றைத் தணிக்கை செய்தார். மேலும், சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனைச் சேவைகள் முறையாகக் கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது திருநெல்வேலி வட்டாட்சியர் மாரிமுத்துகுமார், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் தனி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 24, ஜூன் 2026 9:58:18 PM (IST)

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!
புதன் 24, ஜூன் 2026 8:39:42 PM (IST)

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!
புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

மாமன்றத்தில் த்ரிஷா படத்தை வைக்க வேண்டும் : சுயேச்சை கவுன்சிலர் கோரிக்கையால் பரபரப்பு
புதன் 24, ஜூன் 2026 4:49:43 PM (IST)

நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
புதன் 24, ஜூன் 2026 4:04:08 PM (IST)


