» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்: பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2பேர் கைது!

வியாழன் 25, ஜூன் 2026 12:15:04 PM (IST)

மாமல்லபுரம் அருகே 14 வயது பள்ளிச் சிறுமியைக் கடத்திப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்த முயன்றதுடன், கடையால் தலையில் பலமாகத் தாக்கிவிட்டுத் தப்பிய வாலிபர்கள் இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டில் கழிவறை வசதி இல்லாததால், தினசரி அதிகாலையில் வீட்டின் அருகே உள்ள வயல்வெளிப் பகுதிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த ஜூன் 22-ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்ற அச்சிறுமியை இரண்டு வாலிபர்கள் நோட்டமிட்டுப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

அவர்கள் சிறுமியின் வாயில் துணியைத் திணித்து, அருகே உள்ள ஆள்நடமாட்டமில்லாத கட்டடத்திற்குப் பலவந்தமாகக் கடத்திச் சென்றனர். அங்குச் சிறுமியைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்த முயன்றபோது, அவரிடமிருந்து தப்பிக்கச் சிறுமி முழு பலத்துடன் போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், அருகே கிடந்த கட்டையால் சிறுமியின் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடியபோது அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் ரத்த காயங்களுடன் சிறுமி மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டுச் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் (20) மற்றும் அவரது நண்பரான காரைத்திட்டு பகுதியைச் சேர்ந்த அஜய் (27) ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் திருக்கழுகுன்றத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருவதும், அஜய் மரக்காணம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. கைதான இருவரையும் திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory