» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நலத்திட்டங்களுக்கு மட்டுமே கடன் தொகையைச் செலவிடுவது சரியல்ல : நிர்மலா சீதாராமன்
வியாழன் 25, ஜூன் 2026 4:55:55 PM (IST)
கடன் வாங்குவதில் தவறில்லை என்றாலும், அந்த நிதியைக் கொண்டு உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டுமே தவிர, நலத்திட்டங்களுக்கு மட்டுமே கடன் தொகையைச் செலவிடுவது பொருளாதார ரீதியாகச் சரியல்ல என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது, மத்திய அரசுடன் இணைந்து செயல்படப் போவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளதை அவர் வரவேற்றார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலும் கூட தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிதி அனைத்தும் முறையாகக் கொடுக்கப்பட்டது.தற்போது தமிழ்நாட்டிற்கான மத்திய அரசின் நிதி நிலுவை எதுவுமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான நிதியைக் கடன் வாங்குவதில் எவ்விதத் தவறோ அல்லது குறையோ இல்லை; ஆனால், அவ்வாறு பெறப்படும் கடன் தொகையை நீண்ட காலப் பலன் தரும் அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்க மட்டுமே செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கடன் வாங்கும் நிதியைக் கொண்டு கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இத்தகைய முதலீடுகள் மூலமே ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் நல்லதொரு நேர்மறையான தாக்கம் ஏற்படும் என்றும் அவர் விவரித்தார். நாம் கடன் வாங்கி என்ன செய்கிறோம் என்பதே முக்கியம் என்று சுட்டிக்காட்டிய அவர், கடன் பெற்று அதனை அன்றாட நலத்திட்ட உதவிகளுக்கு மட்டுமே செலவிடக் கூடாது என்றும், மாநிலத்தின் வருவாய் அதிகரித்துப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் காலங்களில் மட்டுமே இத்தகைய நலத்திட்ட உதவிகளைச் தாராளமாகச் செய்யலாம் என்றும் தனது பேட்டியில் அறிவுறுத்தினார்.
மேலும், சட்டசபையில் அரசியல் விமர்சனங்கள் வைக்கப்படுவது இயல்பானது என்றும், அங்கு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களது கருத்துகளைப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

சாலைப் பணிகளில் ரூ.3.23 கோடி மோசடி : எ.வ.வேலு வீடு உட்பட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
வியாழன் 25, ஜூன் 2026 5:19:51 PM (IST)

திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட கல்வி மையம்: விஜய் வந்தவுடன் ஒப்புதல் - ஸ்ரீதர் வேம்பு நன்றி
வியாழன் 25, ஜூன் 2026 4:10:31 PM (IST)

அப்பாவை அங்கு தேடாதீர்கள்! - முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு ஸ்டாலின் பதிலடி!
வியாழன் 25, ஜூன் 2026 12:36:37 PM (IST)

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்: பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2பேர் கைது!
வியாழன் 25, ஜூன் 2026 12:15:04 PM (IST)

மின்வாரியத்திற்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல் குமார்!
வியாழன் 25, ஜூன் 2026 12:05:59 PM (IST)


