» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி மாணவர்கள், விதிமீறல்களுக்கு அபராதம் : தூத்துக்குடியில் போக்குவரத்து போலீசார் அதிரடி!

வியாழன் 18, ஜூன் 2026 3:50:08 PM (IST)



தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பயன்படுத்திய வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்படி, தூத்துக்குடி நகர்ப் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களைப் பயன்படுத்திய வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சுனை முருகன் தலைமையில், உதவி ஆய்வாளர் பாலன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் தூத்துக்குடி நகரின் முக்கியப் பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனங்களை இயக்கிய பள்ளி மாணவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக வந்த வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். குறிப்பாக, பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் பெரும் இடையூறாக, விதிகளுக்குப் புறம்பாக அதிக இரைச்சல் மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களைப் பொருத்தியிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட சைலன்சர்கள் அகற்றப்பட்டன. மேலும், விதிகளை மீறிய பள்ளி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மற்றும் இதர வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து ஆய்வாளர் மற்றும் போலீசார் கடுமையான அறிவுரைகளை வழங்கி எச்சரித்து அனுப்பினர். விபத்துகளைக் குறைக்கவும், நகரின் அமைதியைப் பேணவும் இத்தகைய அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory