» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டு குலுக்கல்: தூத்துக்குடி ஹோட்டல் உரிமையாளருக்கு கார் பரிசு!
வியாழன் 18, ஜூன் 2026 3:20:43 PM (IST)

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 43-வது மாநில மாநாட்டு வளர்ச்சி நிதி குலுக்கல் திட்டத்தில் முதல் பரிசு வென்ற தூத்துக்குடி தெர்மல் நகர் கிளைச் சங்க உறுப்பினர் வி.ரவிக்குமாருக்கு, இன்று கார் வழங்கப்பட்டது.
சுதேசி நாயகன் த.வெள்ளையன் வியாபாரிகளைக் காப்பாற்றவும், அச்சமின்றி வணிகம் செய்யவும் பாதுகாப்பு அரணாகத் 'தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை' என்ற அமைப்பைத் தொடங்கி, அதனைப் பெரும் விருட்சமாக வளர்த்தெடுத்தார். ஆன்லைன் வர்த்தகம் மற்றும் அந்நியப் பொருட்களுக்குத் தடை, சுதேசிப் பொருட்களுக்கு முன்னுரிமை என்ற கோட்பாடுகளுடன் ஆளும் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளூர் வணிகர்களை இப்பேரவை காத்து வருகிறது.
அவரது மறைவிற்குப் பின்பும், அவரது வழியில் கடந்த மே 5-ஆம் தேதி கன்னியாகுமரியில் 43-வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன், மாநிலப் பொதுச் செயலாளர் மெஸ்மர்காந்தன் வெள்ளையன், மாநிலப் பொருளாளர் எஸ்.பீர் முகமது ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், வளர்ச்சி நிதி குலுக்கல் திட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் குலுக்கலில் முதல் பரிசான கார், தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் கிளைச் சங்கத்தின் உறுப்பினராக இருந்து சிறு ஹோட்டல் நடத்தி வரும் வி.ரவிக்குமாருக்குக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இன்று (18.06.2026) வியாழக்கிழமை காலை, தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநிலத் துணைத் தலைவர்கள் பொன்.தனகரன், த.பாஸ்கர், மாநில இணைச் செயலாளர்கள் எச்.வில்லியம்ஸ் மஸ்கர்னாஸ், ஜே.ஜவஹர், ஆர்.விக்னேஷ் ஆகியோர் முன்னிலையில் அதிர்ஷ்டசாலி ரவிக்குமாருக்கு முதல் பரிசுக்கான கார் முறைப்படி வழங்கப்பட்டது.
சுதேசி நாயகன் வழியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்டம், என்றும் வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு அரணாகவும், சொன்னதைச் செய்யும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது என்று மாவட்டத் தலைவர் தெர்மல் சொ.ராஜா பெருமிதத்தோடு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மில்லர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தசேகரன், ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சின்னதங்கம், பர்னிச்சர் சங்கத் தலைவர் ரத்னா தர்மராஜ், வட்டத் தெப்பம் பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணமூர்த்தி, பாளை ரோடு பாதுகாப்புச் சங்கத் தலைவர் பாக்யா மணி, ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்கச் செயலாளர் ஜெய சுரேஷ், தெர்மல் நகர் சங்கப் பொருளாளர் அங்குசாமி, துணைச் செயலாளர் தேவ ஆனந்த், துணைத்தலைவர் முஸ்தபா மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். தெர்மல் நகர் வியாபாரிகள் சங்கச் செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை எக்ஸ்பிரஸை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு : ஆட்டோ ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 5:54:36 PM (IST)

தவெக - பாஜக இடையே இணக்கம்: ஆளுநர் உரை மீது உதயநிதி ஸ்டாலின் சந்தேகம்!
வியாழன் 18, ஜூன் 2026 5:13:24 PM (IST)

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை : 5பேர் சிக்கினர்!
வியாழன் 18, ஜூன் 2026 5:01:28 PM (IST)

திமுக ஆட்சிக்கால அனுமதி: ரூ.2,000 கோடி திட்ட அனுமதி ரத்து - தவெக அரசு அதிரடி நடவடிக்கை!
வியாழன் 18, ஜூன் 2026 4:19:45 PM (IST)

பள்ளி மாணவர்கள், விதிமீறல்களுக்கு அபராதம் : தூத்துக்குடியில் போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, ஜூன் 2026 3:50:08 PM (IST)

தவெக அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை வெளிப்படுத்தியுள்ளது: வைகோ புகழாரம்!
வியாழன் 18, ஜூன் 2026 3:32:37 PM (IST)


