» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நகைக் கடை சுவரில் துளையிட்டு 1 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:37:25 AM (IST)
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மெயின் பஜார் பகுதியில் உள்ள நகைக் கடையின் பின்சுவரைத் துளையிட்டு, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
வீரவநல்லூர் புதுமனைத் தெருவைச் சேர்ந்த அலியார் மற்றும் அவரது மகன் முகமது அசனார் ஆகியோர் மெயின் பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றனர். நேற்று காலை கடையைத் திறந்தபோது, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடையின் பின்புறச் சுவரில் பெரிய துளையிடப்பட்டு அதன் வழியாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து சேரன்மாதேவி டிஎஸ்பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனையிடப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடையிலிருந்த 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் நகைக் கடை உரிமையாளரிடம் நகை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு துணிகரக் கொள்ளை நடந்திருப்பது வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் வீரவநல்லூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பஜார் பகுதியில் சுவரைத் துளையிட்டுக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடியில் விஜய் பிரசாரம்: 15 பேர் காயம்; த.வெ.க. நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்கு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 11:40:28 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 21-ல் கொடியேற்றம்; 30-ல் தேரோட்டம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 11:06:19 AM (IST)

தமிழ்நாடு காவல்துறை இன்னும் பாடம் கற்கவில்லை : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சீமான் கண்டனம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 10:50:37 AM (IST)

தூத்துக்குடியில் மதுபோதை தகராறில் மீனவர் கொலை : இளஞ்சிறார் உட்பட 3 பேர் கைது!
வியாழன் 9, ஏப்ரல் 2026 10:33:30 AM (IST)

ஆலங்குளம் சூடு: சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா சஸ்பெண்ட் – 3 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:26:39 AM (IST)

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் : தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்ய உத்தரவு
புதன் 8, ஏப்ரல் 2026 5:49:25 PM (IST)

