» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை!
புதன் 8, ஏப்ரல் 2026 5:36:31 PM (IST)
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடிகர்களின் வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று விபத்துக்குள்ளாகும் இளைஞர்களுக்கு அவர் முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
மூத்த நடிகராக நீங்கள் இருக்கிறீர்கள். தற்போதுள்ள இளைஞர்கள், நடிகர்கள் மீதுள்ள அதீத ஆர்வத்தால் அவர்கள் செல்லும் வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
ரஜினிகாந்த் அளித்த பதில்: இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கவனக்குறைவாகச் செயல்பட்டு விபத்தில் சிக்கினால், அதனால் ஏற்படும் வலி அவர்களுக்குத்தான். படிக்கிற வயதில் மாணவர்கள் முதலில் படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும். அந்த வயதில் படிப்பைத் தவறவிட்டால், வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டிய சூழல் ஏற்படும். படிப்பில் மட்டுமே உங்களது சிந்தனையும் செயல்பாடும் இருக்க வேண்டும். முதலில் உங்களது உடல்நலத்தையும் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
இளைஞர்கள் மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களுக்கு ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது. இந்தப் பழக்கத்தினால் உங்களது வாழ்க்கை மட்டுமல்லாது, உங்களைப் பெற்றெடுத்த தாய், தந்தை மற்றும் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் வாழ்க்கையே நரகமாகிவிடும். தீய பழக்கங்கள் கொண்ட நண்பர்களிடமிருந்து விலகி, எப்போதும் தூரமாக இருக்க வேண்டும்.
திரைப்படங்கள் குறித்த அப்டேட: ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2, 3 நாட்கள் பாக்கி இருக்கிறது. படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும். மேலும், நானும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும், என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் : தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்ய உத்தரவு
புதன் 8, ஏப்ரல் 2026 5:49:25 PM (IST)

வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.200 கோடி பதுக்கலா? நெல்லையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!
புதன் 8, ஏப்ரல் 2026 5:20:34 PM (IST)

சட்டத்தைக் கையில் எடுத்த உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை: சரத்குமார் வலியுறுத்தல்!
புதன் 8, ஏப்ரல் 2026 4:56:41 PM (IST)

தமிழக தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்: புதிய தலைமைச் செயலாளர் நியமனம்
புதன் 8, ஏப்ரல் 2026 4:21:36 PM (IST)

மக்கள் பணத்தைத் தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை: நெல்லையில் விஜய் பிரச்சாரம்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:46:25 PM (IST)

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:38:44 PM (IST)

