» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொசுவர்த்தி சுருளால் தீ விபத்து : கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு
செவ்வாய் 10, மார்ச் 2026 12:41:21 PM (IST)
கூடுவாஞ்சேரி அருகே, கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவன், மனைவி மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தை என மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே,கன்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (33), ஜெயசித்ரா (29) தம்பதியினர், நேற்று இரவு கொசுத் தொல்லை காரணமாகக் கொசுவர்த்தி சுருளை ஏற்றி வைத்துவிட்டுத் தூங்கியுள்ளனர். நள்ளிரவில் அந்தச் சுருள் அருகில் இருந்த துணிகள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளின் மீது விழுந்ததில், வீடு முழுவதும் தீ பரவியுள்ளது.
வீடு முழுவதும் புகை சூழ்ந்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிகாலையில் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். எனினும், அதற்குள் மூவரும் உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. பலியான மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தம்பிதுரை கல்வி நிறுவன ஆக்கிரமிப்பு: 12 வாரங்களில் நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:21:31 PM (IST)

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் : தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 12:14:39 PM (IST)

போலி காப்பீடு தயாரித்து மோசடி: 5 பேர் கைது - தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி
செவ்வாய் 10, மார்ச் 2026 11:49:29 AM (IST)

விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ, கோட்பாடோ கிடையாது: சீமான் விமர்சனம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:20:15 AM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

மருமகனை அடித்துக் கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 9, மார்ச் 2026 9:45:18 PM (IST)

