» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ, கோட்பாடோ கிடையாது: சீமான் விமர்சனம்!

செவ்வாய் 10, மார்ச் 2026 8:20:15 AM (IST)

இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் அளிக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள் நாட்டைப் பெரும் கடன் சுமைக்கும், அடமானத்திற்கும் தள்ளிவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ள தாலிக்குத் தங்கம் மற்றும் 2,500 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்துத் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஏற்கனவே கடன் சுமை அதிகமாக உள்ள நிலையில், இத்தகைய அறிவிப்புகளை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரம் எங்கிருந்து வரும் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ அல்லது கோட்பாடோ கிடையாது என்றும், ஊழல் கட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களே அவருடன் இருப்பதாகவும் விமர்சித்தார்.

சாராயத்தை ஒழிப்பேன் என்று சொல்ல மறுக்கும் விஜய், முந்தைய ஆட்சியாளர்கள் செய்ததையே மீண்டும் செய்வதாகக் கூறினார். வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவோம் என்று சொல்லாமல், வெறும் பணத்தை வழங்குவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் சீமான் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory