» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் : தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 12:14:39 PM (IST)
2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிப்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் வணிக ரீதியிலான எரிவாயு தட்டுப்பாடு மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளைகுடா போர் சூழலால் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உணவகங்கள் மூடப்பட்டால், அவற்றைச் சார்ந்த விவசாயிகள், ஊழியர்கள் மற்றும் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற விநியோகப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பெட்ரோலியப் பொருட்கள் மத்தியப் பட்டியலில் இருந்தாலும், அதன் விளைவுகளைக் கையாள வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.
எனவே, முதல்வர் உடனடியாக டெல்லி சென்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். 2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிப்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொசுவர்த்தி சுருளால் தீ விபத்து : கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு
செவ்வாய் 10, மார்ச் 2026 12:41:21 PM (IST)

தம்பிதுரை கல்வி நிறுவன ஆக்கிரமிப்பு: 12 வாரங்களில் நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:21:31 PM (IST)

போலி காப்பீடு தயாரித்து மோசடி: 5 பேர் கைது - தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி
செவ்வாய் 10, மார்ச் 2026 11:49:29 AM (IST)

விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ, கோட்பாடோ கிடையாது: சீமான் விமர்சனம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:20:15 AM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

மருமகனை அடித்துக் கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 9, மார்ச் 2026 9:45:18 PM (IST)

