» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஏப்ரலில் தேர்தல்? பிப். 25 முதல் 27 வரை தேர்தல் ஆணையக் குழு புதுச்சேரி, தமிழகத்தில் ஆய்வு
சனி 21, பிப்ரவரி 2026 10:20:59 AM (IST)
சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் பிப்ரவரி 25 முதல் 27-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளுக்கும் வரும் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான தேர்தல் தேதிகள் மார்ச் மாத பாதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் அடங்கிய குழு, பிப். 25 முதல் 27 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த உள்ளனர். இந்தப் பயணத்தின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனும் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, அஸ்ஸாம் மாநிலத்திற்குச் சென்று ஆய்வு செய்த தலைமைத் தேர்தல் ஆணையர், "ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பிஹு திருவிழாவைக் கருத்தில் கொண்டு அஸ்ஸாம் மாநிலத்திற்கான தேர்தல் தேதி இறுதி செய்யப்படும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடையும் தேதிகள்:
மேற்கு வங்கம்: மே 7
தமிழகம்: மே 10
அஸ்ஸாம்: மே 20
கேரளம்: மே 23
புதுச்சேரி: ஜூன் 15
இதனை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
புதுச்சேரி: சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் பின், கடந்த 14-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அஸ்ஸாம்: கடந்த 10-ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
கேரளம்: இன்று (பிப். 21, சனிக்கிழமை) இறுதிப் பட்டியல் வெளியாகிறது.
தமிழகம்: வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
மேற்கு வங்கம்: பிப்ரவரி 28-ஆம் தேதி பட்டியல் வெளியிடப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி அறவழி உண்ணாநிலை போராட்டம்
சனி 21, பிப்ரவரி 2026 3:19:10 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன பூங்கா அமைய ஆய்வு: கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு
சனி 21, பிப்ரவரி 2026 3:16:23 PM (IST)

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடக்கம்!
சனி 21, பிப்ரவரி 2026 10:29:53 AM (IST)

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடியும்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:51:36 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:53:08 PM (IST)

