» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன பூங்கா அமைய ஆய்வு: கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு
சனி 21, பிப்ரவரி 2026 3:16:23 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி 34-வது வார்டு தேவகி நகர் சிறுவர் விளையாட்டு பூங்காவினை மாற்றுத்திறனாளிகள் பூங்காவாக மாற்றுவது தொடர்பாக கனிமொழி நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 34-வது வார்டு தேவகி நகர் பகுதியில், பூங்கா அமைப்பதற்கான திட்டமானது, 34-வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பொதுமக்களின் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதற்கான இடத்தை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா, வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர். மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அதிநவீன உபகரணங்கள் மற்றும் நடைபயிற்சி தளங்களுடன் இந்த பூங்கா அமையவுள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் மக்கள் பயன்பாட்டிற்கு மிக விரைவில் இது கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 21, பிப்ரவரி 2026 4:57:11 PM (IST)

மதுரையில் ரூ.213 கோடி செலவில் புதிய மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சனி 21, பிப்ரவரி 2026 4:29:11 PM (IST)

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி அறவழி உண்ணாநிலை போராட்டம்
சனி 21, பிப்ரவரி 2026 3:19:10 PM (IST)

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடக்கம்!
சனி 21, பிப்ரவரி 2026 10:29:53 AM (IST)

ஏப்ரலில் தேர்தல்? பிப். 25 முதல் 27 வரை தேர்தல் ஆணையக் குழு புதுச்சேரி, தமிழகத்தில் ஆய்வு
சனி 21, பிப்ரவரி 2026 10:20:59 AM (IST)

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

